பொது செய்தி

தமிழ்நாடு

காங்கிரசார் கொண்டாட்டம்

Added : டிச 05, 2019
Advertisement

அன்னுார்:முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற்றதில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ., கைது செய்து, சிறையில் அடைத்தது. இதே விவகாரத்தில், பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவும் வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

இந்த இவ்வழக்குகளில் நேற்று உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியது. இதையடுத்து, அன்னுார், கைகாட்டியில் காங்கிரசார், 10 ஆயிரம் வாலா பட்டாசு வெடித்து கொண்டாடினர்.சிதம்பரத்தையும், சோனியாவையும் வாழ்த்தியும், பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதாக மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில பேச்சாளர் காளிச்சாமி, வட்டார தலைவர்கள் பொன்னுச்சாமி, தங்கம் பழனிசாமி, மாநில கமிட்டி உறுப்பினர் சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X