பொது செய்தி

தமிழ்நாடு

கலையருவியில் கரகாட்டம் அரசூர் பள்ளி மாணவியர் முதலிடம்

Added : டிச 05, 2019
Advertisement
 கலையருவியில் கரகாட்டம் அரசூர் பள்ளி மாணவியர் முதலிடம்

சூலுார்:மாவட்ட அளவிலான கலையருவி கரகாட்டப் போட்டியில், அரசூர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் முதல் பரிசை வென்றனர்.

கோவையில் மாவட்ட அளவிலான கலையருவி போட்டிகள் நடந்தன. தனி நடனம், குழு நடனம், நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தன.இதில், கரகாட்ட பிரிவில், அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த எட்டு பேர் கொண்ட மாணவியர் குழுவினர் திறமைகளை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை பரவசப்படுத்தி முதல் பரிசை வென்றனர்.மேலும், களிமண் சிற்பம் வடித்தல் போட்டியில், இதே பள்ளியை சேர்ந்த மாணவன், வெற்றி விநாயகம் முதல் பரிசை வென்று சாதனை படைத்தார்.

வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்க ஊக்கப்படுத்திய ஆசிரிய, ஆசிரியைகளுக்கு, பள்ளி தலைமையாசிரியர் மரகதம், உதவி தலைமையாசிரியர் வடிவேல் முருகன், ஓவிய ஆசிரியர் மணிமேகலை ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X