அன்னுார்:கெம்பநாயக்கன் பாளையம் தடுப்பணையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்னுார் - கோவை ரோட்டில், கெம்பநாயக்கன்பாளையம் பிரிவில், தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை சில மாதங்களாக நிரம்பி வழிகிறது. ஆனால் தடுப்பணையில், கருப்பு நிறத்தில், கழிவு நீர் தான் அதிகமாக உள்ளது.அந்த வழியில் சென்றால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
கழிவுநீர் நீண்ட நாட்கள் அதிக அளவில் தேங்கி நிற்பதால், அருகில் உள்ள கிணறுகளில் உள்ள நீரும் மாசுபடுகிறது. காரே கவுண்டன்பாளையம் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.