பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு: டிச., 20 கடைசி நாள் என அறிவிப்பு

Added : டிச 05, 2019
Advertisement

சூலுார்:''ரபி பருவத்துக்கான, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர, வரும் டிச., 20ம் தேதி கடைசி நாள்,'' என, விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

காரிப் மற்றும் ரபி பருவத்தில், கிராமப்புறத்தில், அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களான சோளம், மக்காச்சோளம் மற்றும் பயிறுவகைகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்காக, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.வறட்சியினால் தவிர்க்கப்பட்ட விதைப்பு, விதைப்பு முதல் அறுவடை வரை ஏற்படும் இயற்கை இன்னல்களால் ஏற்படும் இழப்பு, அறுவடைக்குப்பின் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

சூலுார் வட்டார வேளாண் அலுவலர்கள் கூறியதாவது:பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்காக நிவாரணம் வழங்கி, அவர்களின் வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.இத்திட்டத்தில், பிரீமியத்தொகையாக ஒரு ஏக்கர் சோளத்துக்கு, ரூ.155, மக்காச்சோளத்துக்கு ரூ.400, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரபி பருவத்துக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் சேர, வரும், டிச., 20ம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பயிர் கடன் பெற்றவர்கள் தானாகவே இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவர்.

சூலுார் மற்றும் கருமத்தம்பட்டி பிர்காவில், பயிர் கடன் வாங்காத விவசாயிகள், தங்களுக்கு விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி பாஸ்புக் நகல் மற்றும் இரு புகைப்படங்களுடன் சூலுார் வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X