மேட்டுப்பாளையம்:சிறுமுகை, இலுப்பபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 45; விவசாயி. இவர் பாலப்பட்டி அடுத்த வேடர் காலனியில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். அதிகாலை 4.30 மணியளவில் தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை விரட்டினார். அப்போது யானை இவரை துாக்கி வீசியது. அருகே இருந்த கிணற்றில் விழுந்த ரங்கநாதன் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement