குறுகலாக கட்டப்படும் பாலம் அழகேபாளையம் மக்கள் புகார்

Added : டிச 05, 2019
Share
Advertisement
அன்னுார்:அழகேபாளையத்திற்கு மிகவும் குறுகலாக பாலம் கட்டப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.குப்பனுார் ஊராட்சியில், ஆணையூரிலிருந்து அழகேபாளையத்திற்கு செல்லும் வழியில் பள்ளம் உள்ளது. மழை காலங்களில் இந்த பள்ளத்தில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, இந்த பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், இந்த பள்ளத்தில் தரைப் பாலம் கட்ட வேண்டும் என, மக்கள்
 குறுகலாக கட்டப்படும் பாலம் அழகேபாளையம் மக்கள் புகார்

அன்னுார்:அழகேபாளையத்திற்கு மிகவும் குறுகலாக பாலம் கட்டப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குப்பனுார் ஊராட்சியில், ஆணையூரிலிருந்து அழகேபாளையத்திற்கு செல்லும் வழியில் பள்ளம் உள்ளது. மழை காலங்களில் இந்த பள்ளத்தில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, இந்த பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால், இந்த பள்ளத்தில் தரைப் பாலம் கட்ட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து பள்ளத்தில் தரைப்பாலம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.ஆனால், 'பாலம் மிகவும் குறுகலாகக் கட்டப்படுகிறது. இதனால் மழை நீர் பாலத்தின் இருபுறமும் சென்று, தார் ரோட்டை அரித்து விடும். எனவே, பாலத்தை அகலமாக கட்ட வேண்டும்' என, அழகேபாளையம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X