டிச.26ல் சூரியகிரகணத்தை காண பிரத்யேக கண்ணாடிகள்| Dinamalar

தமிழ்நாடு

டிச.26ல் சூரியகிரகணத்தை காண பிரத்யேக கண்ணாடிகள்

Added : டிச 05, 2019

கொடைக்கானல் டிச.26ல் ஏற்படும் சூரியகிரஹணத்தை காண கொடைக்கானல் வானியியற்பியல் மையத்தில் பிரத்யேக கண்ணாடிகள் விற்பனைக்கு உள்ளன.இதுகுறித்து வானியியற்பியல் விஞ்ஞானிகள் செல்வேந்திரன், எபினேசர், குமரவேல் கூறியதாவது: அரிய நிகழ்வான இக்கிரஹணம் 2006 ல் ராஜஸ்தான் 'நிம்கா தானா'வில் நிகழ்ந்தது. 13 ஆண்டுகள் கழித்து டிச.26 ல் அரபிக்கடலில் காலை 8:30 க்கு தொடங்கி 9:33 க்கு உச்சிநிலை அடைந்து, பின்னர் பகல் 11:32 மணிக்கு நிறைவடையும்.இந்நிகழ்வு கேரளா, கோயம்புத்துார், திருப்பூர், நத்தம், திண்டுக்கல், புதுக்கோட்டை, மணல்குடியில் நன்கு தெரியும். இந்நிகழ்வின் போது பகலில் இருள் சூழ்வதை காணலாம். 97.3 சதவிகிதம் தெரியும் கிரஹணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது பாதிப்பை ஏற்படுத்தும்.இந்நிகழ்வை பல்வேறு கோணங்களில் ஆராய 7 தொலை நோக்கிகள் தயார் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்க்க ஏதுவாக ஆய்வகத்தில் 10 ஆயிரம் சூரிய கண்ணாடிகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு கண்ணாடி ரூ.10 க்கு விற்கப்படுகிறது. தேவைப்படுவோர் 94429 39946 ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X