தமிழ்நாடு

பருவ மழை காலத்தில் இடியும் கட்டடங்களால்...மனதில் ஆறாத ரணம்!:உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வது அவசியம்

Added : டிச 05, 2019
Advertisement

சூலுார்:பருவ மழைக்காலங்களில், மேற்கூரை, சுற்றுச்சுவர் இடிந்து விழுதல் உள்ளிட்ட சம்பவங்களில், அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்கும் வகையில், கட்டடங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில், தொடர்ந்து பெய்யும் மழையால், ஒரு பக்கம் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மறுபுறத்தில், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவது, நீர் வழித்தடங்களில் கட்டப்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.பழமையான கட்டடங்கள், பாலங்கள், வணிக வளாகங்கள், அரசு கட்டடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், மழைநீர் முறையாக வெளியேற முடியாமல் கட்டடத்தின் மீது தேங்கி நின்று,

உயிர்களை பலி வாங்கும் அளவுக்கு மாறுகின்றன.அதேபோல், மாவட்டத்தில் உள்ள பள்ளி கட்டடங்கள் பலவும், பழமையானவை. மழை காலம் வந்தால், எப்போது விழுமோ என்ற அச்சத்தில் மாணவர்களும், ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த, 2017 செப்., 7ம் தேதி சோமனுார் பஸ் ஸ்டாண்டில், மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.கல்லுாரி மாணவி, ஒரு காலை இழந்தார். கூலித்தொழிலாளிகள் இருவர் நிரந்தர ஊனமடைந்தனர்.

விபத்து நடந்த இரு தினங்களுக்கு முன் சோமனுார் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.விபத்தில் இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு சார்பில், நிதி உதவி வழங்கப்பட்டது. விபத்து குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன் தீப்சிங் பேடி விசாரணை மேற்கொண்டார்.

இரண்டு ஆண்டுகளாகியும் விசாரணை அறிக்கை வெளியிடப்படவில்லை. அன்னுார், கோவில்பாளையம், சூலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளை ஆய்வு செய்த அவர், அரசுக்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து, கட்டி பல ஆண்டுகளாகிய சூலுார் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் இடிக்கப்பட்டு, வேறு இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில்...கடந்த, 2ம் தேதி மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நடூர் பகுதியில், தனியார் தடுப்புச் சுவர் நள்ளிரவில் இடிந்து வீடுகள் மீது விழுந்து, 17 பேர் பலியாகினர். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் கண்ணிமைக்கும் நேரத்தில், மரணத்தை தழுவியது மக்களின் மனதில் ஆறாத ரணமாகியுள்ளது. இரு நாட்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை பெய்துள்ளது.


அலட்சியமே காரணம்

சோமனுார் பஸ் ஸ்டாண்ட் விபத்துக்கு முக்கிய காரணம், கட்டடம் முறையாக பராமரிக்கப் படாதது தான். மேற்கூரையில் மழைநீர் தேங்கி, கம்பிகள் துருப்பிடித்து பலவீனம் அடைந்து, இடிந்து விழுந்தது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு கட்டடங்கள், பாலங்கள், பள்ளிகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளன. பழமையான கட்டடங்களை இடித்து அகற்றக் கூட, அனுமதிக்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதேபோல், நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்படுவதாலும், மழைநீர் முறையாக வெளியேற வழியில்லாமல் கட்டடங்கள் கட்டுவதும் பெரிய விபத்துகளுக்கு காரணமாகிவிடுகிறது.அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் எதுவாகினும், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் நேரடியாக கள ஆய்வு செய்து, உரிய விதிகளுடன் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

அதேபோல், கட்டடங்களின் உறுதி தன்மை குறித்தோ, விதி மீறல் குறித்தோ புகார் வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான், மேட்டுப்பாளையம் சம்பவம் போன்று, மேலும் ஒரு துயரம் அரங்கேறாமல் தடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X