பொது செய்தி

தமிழ்நாடு

நன்கு விளையும் முன்பே அறுவடையாகும் வெங்காயம் நல்ல விலை கிடைப்பதால்

Added : டிச 05, 2019
Advertisement

ஒட்டன்சத்திரம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 க்கு மேல் விற்பதால், விளைவதற்கு முன்பே ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒருசில இடங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.ஒட்டன்சத்திரம் பகுதியில் வெங்காயம் தனியாகவும், ஊடுபயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்யாமல் சாரல் மழையுடன் நின்றுவிடுவதால் கிணறு, போர்வெல்கள் வற்றியது. ஆயிரம் அடிக்கும் கீழ் போர்வெல் அமைத்தும் தண்ணீர் வரவில்லை.இந்நிலையில் சாரல் மழையை பயன்படுத்தி சில நாட்களுக்கு முன்பே இப்பகுதியில் மானாவாரியாக சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டது. ஒருசில இடங்களில் போர்வெல்களில் கிடைத்த சொற்ப நீரை பயன்படுத்தி மிளகாயுடன் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டனர். இவை முக்கால் விளைச்சல் விளைந்த நிலையில் தற்போது நல்ல விலை கிடைப்பதாலும், தொடர்ந்து மழை பெய்தால் அழுகிவிடும் என்பதாலும் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்ய தொடங்கி விட்டனர். அவற்றை தயார்படுத்தி உடனுக்குடன் மார்க்கெட்டுக்கு அனுப்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X