பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு அறிவிப்பு

Added : டிச 05, 2019
Advertisement
 உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு அறிவிப்பு

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளின் தலைவர் பதவிகளில் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அல்லப்பாளையம், ஆம்போதி, அ.மேட்டுப்பாளையம், பச்சாபாளையம், பிள்ளையப்பம்பாளையம், பொகலுார், வடக்க லுார் ஆகிய ஏழு ஊராட்சிகள் பொது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, காட்டம்பட்டி, குன்னத்துார், குப்பேபாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், ஒட்டர்பாளையம், பசூர் ஆகிய எட்டு ஊராட்சிகள் பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கஞ்சப்பள்ளி, காரேகவுண்டன்பாளையம், நாரணாபுரம் ஊராட்சிகள் பொது ஆதி திராவிடருக்கும், கரியாம்பாளையம், குப்பனுார், வடவள்ளி ஊராட்சிகள் ஆதி திராவிடர் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்னுார் ஒன்றியத்திலுள்ள அக்கரை செங்கப்பள்ளி, குப்பனுார், கணுவக்கரை, ஆம்போதி, வடக்கலுார், ஒட்டர்பாளையம், கஞ்சப்பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், பொகலுார், கரியாம்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், காரே கவுண்டன்பாளையம், வடவள்ளி ஆகிய, 15 ஊராட்சிகள் அடங்கிய மாவட்ட கவுன்சிலர் வார்டு எண் 3 பொது ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வார்டு எண், 3 தொடர்ந்து 20 ஆண்டுகளாக பொது ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மீண்டும் அந்த ஒதுக்கீடு தொடர்கிறது.ஒதுக்கீடு அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதால், மாஜிக்கள் கவுன்சிலர்கள் மற்றும் புதிதாக போட்டியிட விரும்புவோர் ஆர்வமாக ஒன்றிய அலுவலகத்தில் பார்வையிட்டனர். ஏராளமானவர்கள் வாக்காளர் பட்டியல் நகலை, ஒரு பக்கத்திற்கு ஐந்து ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி பெற்றுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X