பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உரம் தயாரிப்பு: அசத்தும் ராயபுரம் மண்டலம்

Added : டிச 05, 2019
Advertisement
 இயற்கை உரம் தயாரிப்பு: அசத்தும் ராயபுரம் மண்டலம்

ராயபுரம்:ராயபுரத்தில், இளநீர் மட்டை, கரும்பு சக்கை, வாழைத்தாரில் இயற்கை உரம் தயாரித்து, பொதுமக்களிடம் அமோகமாக விற்பனை செய்து, மாநகராட்சியினர் அசத்தியுள்ளனர்.

ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட, 49வது வார்டு முதல், 53வது வார்டு வரை உள்ள பகுதிகளில், ஆயிரக்கணக்கான தெருக்கள் உள்ளன.இங்குள்ள சந்தைகள், கடைகள், ஓட்டல்கள், பன்னாட்டு நிறுவன காய்கறி, பழங்கள் விற்பனை கடைகளில் இருந்து, தினமும், 10 டன் கெட்டு போன காய்கறி கழிவுகள் கொண்டு வரப்படுகின்றன.மேலும், இளநீர் மட்டை, கரும்பு சக்கை, வாழைத்தார் உள்ளிட்டவற்றை, துப்புரவு ஊழியர்கள், கை ரிக் ஷாக்களில் பெற்று, மூலக்கொத்தளம், பேசின் பாலம் சாலையில் உள்ள உரம் தயாரிக்கும் மையத்திற்கு கொண்டு வருகின்றனர்.அங்கு, அரவை இயந்திரத்தில், அனைத்தும் அரைக்கப்படுகிறது. பின், 8 அடி நீளத்தில், 30 தொட்டிகள் வைக்கப்பட்டு, அரைத்த காய்கறி, பழங்கள், வாழைத்தார், கரும்பு சக்கை, இளநீர் மட்டைகளை கொட்டுகின்றனர்.அதன் மேல், இ.எம்.ஏ., எனும் திறன்மிகு நுண்ணுயிரி உரத்தை, மேல்புறம் துாவி விடுகின்றனர். இவை, 15 நாள் முதல், 30 நாட்களுக்குள், மக்கி உரமாக மாறுகிறது.

உரம் தயாரிக்கும் செலவை குறைக்கும் வகையில், அழகிய வடிவில் நெகிழி பையில், உரத் தொட்டிகள் அமைத்து, மாநகராட்சியினர் உரம் தயாரிக்கின்றனர். இது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்து மண்டல உதவி பொறியாளர் பழனி கூறியதாவது:உர மையம், 15 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உரம், கிலோ, 20 ரூபாய் வீதம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, ராயபுரத்தில், ஐந்து இடங்களில், உர விற்பனை மையம் துவங்கப்பட்டுள்ளன. இதுவரை, 10 ஆயிரம் ரூபாய்க்கு, உரம் விற்பனையாகி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X