பொது செய்தி

தமிழ்நாடு

'அண்ணன், தம்பி' தடுப்பணை நிரம்பியது தூர்வாரிய விவசாயிகள் மகிழ்ச்சி

Added : டிச 05, 2019
Advertisement
 'அண்ணன், தம்பி' தடுப்பணை நிரம்பியது தூர்வாரிய விவசாயிகள் மகிழ்ச்சி

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையம் அருகே, கோவனுார் மலை அடிவாரத்தில் உள்ள அண்ணன், தம்பி பள்ளம் தடுப்பணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தாண்டு பருவமழை எதிர்பார்த்ததை விட, அதிகளவு பெய்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கோவை வடக்கு, பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவனுார் மலை அடிவாரப் பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் வெள்ளமென மழை நீர், பெருகி அண்ணன், தம்பி ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த இரண்டு ஓடைகளும் இணையும் பகுதியில் உள்ள தடுப்பணையில், மழைநீர் சேர்ந்து, கடந்த சில நாட்களாக வழியத் தொடங்கியது.இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்த, 2017ம் ஆண்டு வரை இந்த தடுப்பணை துார்வாரப்படாமல் இருந்தது. விவசாயிகள் மற்றும் சில தன்னார்வலர்களின் நிதி உதவியுடன் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால், இத்தடுப்பணை நிறைந்துள்ளது.கோவனுார் சுற்றியுள்ள, 5 கி.மீ., சுற்றளவில், நிலத்தடி நீர் பெருகும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X