பொது செய்தி

தமிழ்நாடு

சித்திரை குளத்தில் கமிஷனர் ஆய்வு

Added : டிச 05, 2019
Advertisement

மயிலாப்பூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மயிலாப்பூர், சித்திரைக்குளத்தை, மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து, குளத்தை துார் வாரும் பணிகளை மேற்கொள்ளுமாறு, அறக்கட்டளை நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.

சென்னையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தும், மயிலாப்பூர், சித்திரைக்குளம் வறண்டு காணப்படுகிறது.தனியார் கோவில், அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்குளத்திற்கு, 12 வடிகால் மூலம் தண்ணீர் வர கட்டமைப்பு இருந்தும், ஏழு வடிகாலில் மட்டுமே நீர்வரத்து உள்ளது. மேலும், குளத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளால், சாலையில் ஓடும் மழைநீர், குளத்திற்குள் செல்ல வழியில்லாமல் தடைபட்டுள்ளது.இது குறித்து, நம் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மாநக ராட்சி கமிஷனர் பிரகாஷ், நேற்று காலைஅதிகாரிகளுடன் சித்திரைக்குளத்தில், ஆய்வு மேற்கொண்டார். அறக்கட்டளை நிர்வாகிகளை அழைத்து, உடனடியாக துார் வாரும் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.தண்ணீர் வராத ஐந்து வடிகால்களில், விரைந்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X