பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் இல்லாததால் சான்றிதழ்கள் பதிய வருவோர் அவதி

Added : டிச 05, 2019
Advertisement
 அடிப்படை வசதிகள் இல்லாததால் சான்றிதழ்கள் பதிய வருவோர் அவதி

சாந்தோம்:சாந்தோமில், வேலை வாய்ப்பு மற்றும் நர்சிங் மருத்துவ கவுன்சில் அலுவலகங்களுக்கு, சான்றிதழ்களை பதிவு செய்ய வருவோர், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால், கடும் அவதிஅடைந்து வருகின்றனர்.
சாந்தோம் நெடுஞ்சாலையில், த.கு.மா.வாரியத்திற்கு சொந்தமான கட்டடத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகங்கள் செயல்படுகின்றன.பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சான்றிதழ் பதிவு செய்ய, தினமும், நுாற்றுக்கணக்கானோர் இங்கு வருகின்றனர். 10:00 மணிக்கு அலுவலகம் திறக்கும் நிலையில், வெளியூரில் இருந்து வருவோர், அதிகாலையில் இருந்தே வர துவங்குவர்.ரூ.2,000 கட்டணம்கைக்குழந்தை, குடும்பத்துடன் வரும் வெளியூர்வாசிகள், அலுவலக வளாகத்தில் அமர, இருக்கை வசதிகள் இல்லாமல், மழையிலும், வெயிலிலும் ஒதுங்க இடமின்றி, தவித்து வருகின்றனர்.
இது குறித்து, சான்றிதழ் பதிவு செய்ய வந்த, பெண்ஒருவர் கூறியதாவது:வெளியூரில் இருந்து வரும் நாங்கள், விரைவாக வேலையை முடித்து, உடனடியாக ஊர் திரும்ப வேண்டும் என, நேரடியாக அலுவலகத்திற்கு வந்து விடுகிறோம். மேற்கூரை இல்லாததால், மழை பெய்யும் போது, சான்றிதழ்கள் நனையாமல், பாதுகாக்க சிரமமாக உள்ளது.இருக்கை வசதிகள் இன்றி, நனைந்த தரையில், அமர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அலுவலகத்திற்குள் நாங்கள் சென்றாலும், எங்கள் கூட வரும் குடும்பத்தினர், குழந்தைகள் வெளியில் தான் இருக்க வேண்டும்.எங்களை போன்று, தினமும் நுாற்றுக்கணக்கானோர், இங்கு வந்து செல்கின்றனர். உடனடியாக மேற்கூரை, இருக்கைகள் அமைக்க வேண்டும்.மேலும், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்ய, மருத்துவ கவுன்சில் தரப்பில், 2,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.நடவடிக்கைநாங்கள் காலையில் வந்தவுடனே சில நபர்கள், எங்களை அணுகி, 'எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடையில், ஆன்லைன் மூலம், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விட்டால், அலுவலகம் திறந்தவுடன், மிக எளிதாக சரிபார்த்தல் மட்டும் செய்து, விரைவில் சென்று விடலாம். 'அதற்கு கட்டணமாக, 3,000 ரூபாய் செலவாகும்' என, எங்களை அணுகினர் என கூறினார்.

இது குறித்து, நர்சிங் மருத்துவ கவுன்சில் பதிவாளர், அனிகிரேஸி கூறியதாவது:மேற்கூரை மற்றும் இருக்கைகள் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தனிநபர்கள், இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக, எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன.சான்றிதழ் பதிவு செய்ய வருவோர், அவர்களிடம் ஏமாற வேண்டாம். அப்பகுதி, 'ஜெராக்ஸ்' கடைக்காரர்கள், இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், காவல் துறையிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X