பொது செய்தி

தமிழ்நாடு

நீரோட்டத்திற்கு தடை ஆகாய தாமரை அகற்றம்

Added : டிச 05, 2019
Advertisement
 நீரோட்டத்திற்கு தடை ஆகாய தாமரை அகற்றம்

தரமணி:தரமணியில் உள்ள குளம் மற்றும் கால்வாயில், நீரோட்டத்திற்கு தடையாக அடர்ந்து வளர்ந்திருந்த, ஆகாய தாமரை அகற்றும் பணி நடக்கிறது.
அடையாறு மண்டலம், 180வது வார்டு, தரமணி, பெரியார் நகரில் இருந்து வெளியேறும் மழைநீர், கல்லுக்குட்டை குளத்தை அடைகிறது.குளம் நிரம்பி, அங்கிருந்து, 12 அடி நீளம், 1,800 அடி அகல முடைய கால்வாய் வழியாக, வேளச்சேரி தரைப்பாலத்தில் சேர்ந்து, அங்கிருந்து சதுப்பு நிலத்தை அடைகிறது.குளத்தில் உள்ள கால்வாய் முகப்பு பகுதி மற்றும் கால்வாய் வழித்தடத்தில், நீரோட்டத்திற்கு தடையாக, ஆகாய தாமரை வளர்ந்தது. சமீபத்தில் பெய்த மழையில், தாமரை அதிகளவு கால்வாய்க்குள் புகுந்ததால், நீரோட்டம் தடைபட்டது.இதையடுத்து, குளம் மற்றும் கால்வாயில் உள்ள ஆகாய தாமரை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.குளத்தின் கரை பகுதி தாமரையை, மாநகராட்சி மலேரியா பணியாளர்கள் அகற்றுகின்றனர். ஆழமான பகுதி தாமரை, இயந்திரம் கொண்டு அகற்றப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X