பொது செய்தி

தமிழ்நாடு

விமான நிலையம் - மெப்ஸ் வரை சீருந்து

Added : டிச 05, 2019
Advertisement

சென்னை:விமான நிலைய மெட்ரோ சீருந்து, 'மெப்ஸ்' வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை, விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் வரும் பயணியர், நிலையத்தில் இருந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல ஏதுவாக, முக்கிய நிலையங்களில், மெட்ரோ நிர்வாகத்தின் சார்பில், சீருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சீருந்தில், ஆறு பேர் பயணிக்கலாம். நபருக்கு, கட்டணம், 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.விமான நிலைய, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மலுக்கு சீருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சீருந்து, தாம்பரம் வரை இயக்கப்பட வேண்டும் என, பயணியரால் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.இதையொட்டி, விமான நிலைய மெட்ரோ நிலையத்தில் இருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக, நேற்று முதல், 'மெப்ஸ்' எனும் மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் வரை, சீருந்து இயக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 நிமிட இடைவெளியில், சீருந்து இயக்கப்படுகிறது. காலை, 6:00 மணியில் இருந்து, இரவு, 9:00 மணி வரை இயக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X