பொது செய்தி

தமிழ்நாடு

அதிக ஏரிகள் உள்ள மாவட்டம் பெருமையை இழந்தது காஞ்சி

Added : டிச 05, 2019
Advertisement
 அதிக ஏரிகள் உள்ள மாவட்டம் பெருமையை இழந்தது காஞ்சி

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டதால், ஏரிகள் மாவட்டம் என்ற பெருமையை, காஞ்சிபுரம் இழந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை பராமரிப்பில், 909 ஏரிகள் இருந்தன. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, ஏரிகள் அதிகம் உள்ள மாவட்டம் என்ற பெருமை இருந்தது. இதில், 92 ஏரிகள், முழுவதும் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பல ஏரிகள், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்டு பராமரிக்கும் பணிகளில், பொதுப்பணித் துறை கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள், 381 பொதுப்பணித் துறை ஏரிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.மீதமுள்ள, 528 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், அதிக ஏரிகளை கொண்ட மாவட்டம் என்ற பெருமையை, காஞ்சிபுரம் இழந்துள்ளது.வட கிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள்வேகமாக நிரம்பிவருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 92 பொதுப்பணித் துறை ஏரிகள், முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. நிரம்பும் நிலையில், 162 ஏரிகள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், 131 ஏரிகள் நிரம்பியுள்ளன. நிரம்பும் நிலையில், 194 ஏரிகள் உள்ளன. இன்னும் ஒரு நாள் மழை பெய்தால், இந்த ஏரிகள் நிரம்பிவிடும். ஏரிகள் நிரம்பி வருவதால், கரைகள் உடைக்கப்படுவதை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X