மாணவர்களுக்கான வாலிபால் பிரன்ட் லைன் பள்ளி அணி சாம்பியன்

Added : டிச 05, 2019
Advertisement
 மாணவர்களுக்கான வாலிபால் பிரன்ட் லைன் பள்ளி அணி சாம்பியன்

கோவை:மண்டல அளவில் பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, திருப்பூர் பிரன்ட் லைன் பள்ளி அணி, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

ஈச்சனாரி, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியின் சார்பில், ரத்தினம் டிராபிக்கான மண்டலஅளவிலான வாலிபால் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது.கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 25 அணிகள் பங்கேற்றன. 'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன.

'லீக்' போட்டிக்கு திருப்பூர் பிரன்ட் லைன் பள்ளி, ராகவேந்திரா பள்ளி, சபர்பன், விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி அணிகள் பங்கேற்றன.முதல் லீக் போட்டியில், திருப்பூர் பிரன்ட் லைன் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், ராகவேந்திரா பள்ளி அணியையும்; 2வது போட்டியில், சபர்பன் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், பாரதி பள்ளி அணியையும் வென்றன.

3வது போட்டியில், பிரன்ட் லைன் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், பாரதி பள்ளி அணியையும்; 4வது போட்டியில், ராகவேந்திரா பள்ளி அணி, 2-1 என்ற செட் கணக்கில், சபர்பன் பள்ளி அணியையும் வென்றன.5வது போட்டியில், ராகவேந்திரா பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், பாரதி பள்ளி அணியையும்; 6வது போட்டியில், பிரன்ட் லைன் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், சபர்பன் பள்ளி அணியையும் வென்றன.

போட்டியின் முடிவில், அதிக புள்ளிகள் பெற்ற திருப்பூர் பிரன்ட் லைன் பள்ளி அணி முதலிடத்தையும், ராகவேந்திரா பள்ளி அணி இரண்டாமிடத்தையும், சபர்பன் பள்ளி அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கு, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கோவை மாவட்ட வாலிபால் கழகத்தின் சேர்மன் ஆறுசாமி, ரத்தினம் கல்வி குழுமங்களின் சேர்மன் மதன் செந்தில் கோப்பைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கினர்.சி.இ.ஓ., மாணிக்கம், முதல்வர் முரளிதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சிறந்த வீரர்கள்சிறந்த 'அட்டாக்கர்' ஆக, ராகவேந்திரா பள்ளியின் சதீஷ்குமார், சிறந்த 'லிப்டர்' ஆக, சபர்பன் பள்ளியின் அஸ்வத், சிறந்த தடுப்பாட்டக்காரர் ஆக பிரன்ட் லைன் பள்ளியின் குருபிரசாத், சிறந்த 'ஆல்ரவுண்டர்' ஆக கவுதம்பாரதி, வளர்ந்து வரும் சிறந்த வீரர் ஆக, பாரதி பள்ளியின் பரத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X