தடகளம்; பள்ளி மாணவர்கள் 'அதகளம்'

Added : டிச 05, 2019
Advertisement
 தடகளம்; பள்ளி மாணவர்கள் 'அதகளம்'

கோவை:நேரு ஸ்டேடியத்தில் நடந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டியில், வீரர்கள் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

கோவை, ஸ்ரீநாராயணகுரு பாலிடெக்னிக் கல்லுாரியின் சார்பில், முதலாம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.14,17,19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில், 60மீ., 100மீ., 400மீ., நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல், உயரம்தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.போட்டியை, ஸ்ரீநாரா யணகுரு பாலிடெக்னிக் கல்லுாரியின் அறங்காவலர் வாசு, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.கல்லுாரி முதல்வர் உதயகுமார், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போட்டி ஒருங்கிணைப்பாளராக, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் சதீஷ்குமார் செயல்பட்டார்.19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான நீளம் தாண்டுதலில், பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியின் அத்மிகா, ஸ்ரீஅவினாசிலிங்கம் பள்ளியின் விஷ்ணுபிரியா, பிரியங்கா; 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான உயரம் தாண்டுதலில், சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளியின் லிங்கேஸ்வரன், ஸ்ரீவள்ளியப்பா பள்ளியின் அருண், நேஷனல் ஸ்போர்ட்ஸ் பள்ளியின் நிரன்ஷா; 17 வயதுக்கு உட்பட்ட குண்டு எறிதலில் செயின்ட் பால்ஸ் பள்ளியின் விஷ்ணு, நுார்சேட் பள்ளியின் அப்சரூதின், முகமது ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X