'சாப்ட் டென்னிஸ்' விளையாட்டு போட்டி: கோவை மாணவிக்கு தேசிய அளவில் 3ம் ரேங்க்

Added : டிச 05, 2019
Share
Advertisement
கோவை:தேசிய சாப்ட் டென்னிஸ் விளையாட்டு பெண்களுக்கான தரவரிசை பட்டியலில் கோவை, கிருஷ்ணம்மாள் கல்லுாரியில் படிக்கும் அமிதா ஸ்ரீ சிவா, மூன்றாமிடத்தில் உள்ளார்.கோவை, அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரியில் படிக்கும் அமிதா ஸ்ரீ சிவா, 19. இவர் கடந்த, 7 ஆண்டுகளாக சாப்ட் டென்னிஸ் போட்டிக்காக, பயிற்சி பெற்று வருகிறார். தந்தையே பயிற்சியாளராக இருப்பது, அமிதாவுக்கு

கோவை:தேசிய சாப்ட் டென்னிஸ் விளையாட்டு பெண்களுக்கான தரவரிசை பட்டியலில் கோவை, கிருஷ்ணம்மாள் கல்லுாரியில் படிக்கும் அமிதா ஸ்ரீ சிவா, மூன்றாமிடத்தில் உள்ளார்.

கோவை, அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரியில் படிக்கும் அமிதா ஸ்ரீ சிவா, 19. இவர் கடந்த, 7 ஆண்டுகளாக சாப்ட் டென்னிஸ் போட்டிக்காக, பயிற்சி பெற்று வருகிறார். தந்தையே பயிற்சியாளராக இருப்பது, அமிதாவுக்கு கூடுதல் பலம்.முதன் முறையாக சேலத்தில் நடந்த, மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில், 4 தங்கம் வென்று அசத்தினார்.

தொடர்ந்து, கடின பயிற்சியின் மூலம், 20க்கும் மேற்பட்ட தேசிய போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் நடந்த, தேசிய அளவிலான போட்டியில், இரண்டு முறை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிக்கு, இந்திய அணியில் தேர்வாகினார்.டில்லியில், 2015ம் ஆண்டு நடந்த, 'ஓல்ட் சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப்' போட்டியில், காலிறுதி வரை தகுதி பெற்றார்.

தொடர்ந்து, பிலிப்பைன்சில் நடந்த ஆசிய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். தற்போது, இந்தியா சாப்ட் டென்னிஸ் போட்டிக்கான தரவரிசையில் மூன்றாமிடத்தில் உள்ளார். இம்மாணவியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், பெற்றோர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.


சாப்ட் டென்னிஸ் விளையாட்டு பற்றி சொல்லுங்களேன்...?

டென்னிஸ் விளையாட்டை போன்றதுதான், சாப்ட் டென்னிஸ் விளையாட்டும். விதிமுறையில் சிறிய மாற்றம் உள்ளது. ராக்கெட்டின் எடை குறைவாக இருக்கும். பந்து காற்று நிரப்பப்பட்ட ரப்பரினால் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த விளையாட்டுக்கு சங்கங்கள் உள்ளதா... அவற்றின் செயல்பாடு பற்றி?



தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் அசோசியேஷன் உள்ளது. தலைவர், செயலாளர்கள் உள்ளனர். திறமையான வீரர்களை கண்டறிந்து, தேசிய போட்டிக்கு அனுப்புவதே சங்கத்தின் நோக்கமாகும்.


விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை?



விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு, தரமான விளையாட்டு உபகரணம், உணவு, பயிற்சி போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால், சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை அள்ள முடியும்.அரசு சார்பில் பல்வேறு போட்டிகளை நடத்தினால் மட்டுமே, இளம் வீரர்களின் திறமைகளை கண்டறிய முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X