மாநில அளவிலான அண்ணா பல்கலை தடகள போட்டி கலைஞர் கருணாநிதி கல்லூரி மூன்றாமிடம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
கோவை:மாநில அளவிலான இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான தடகள போட்டியில், கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணி, மூன்றாமிடம் பிடித்தது.இன்ஜி., கல்லுாரி மாணவர்களை, விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தும் விதமாக, சென்னை அண்ணா பல்கலையின் சார்பில், ஆண்டுதோறும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.தமிழ்நாடு அண்ணா பல்கலையின் கீழ், 19 மண்டலங்கள் உள்ளன. கோவை

கோவை:மாநில அளவிலான இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான தடகள போட்டியில், கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணி, மூன்றாமிடம் பிடித்தது.

இன்ஜி., கல்லுாரி மாணவர்களை, விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தும் விதமாக, சென்னை அண்ணா பல்கலையின் சார்பில், ஆண்டுதோறும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.தமிழ்நாடு அண்ணா பல்கலையின் கீழ், 19 மண்டலங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தில், ஜோன்- 9, ஜோன்- 10, ஜோன்- 11 என மூன்று மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் வெற்றி சிறந்த வீரர்கள், மாநில போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.

இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான தடகள போட்டி நாமக்கல், கொங்கு நாடு இன்ஜி., கல்லுாரியில் நடந்தது. அனைத்து மண்டலங்களிலிருந்து, 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1,500மீ., நடை, உயரம்தாண்டுதல், நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், போட்டிகள் நடந்தன.இதில், கோவை ஒன்பதாவது மண்டலத்துக்கு உட்பட்ட,கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணி, 4x100மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம், 110மீ., மற்றும் 400மீ., தடை தாண்டி ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர்.

போட்டியின் முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவில், சென்னை செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி, லயோலா கல்லுாரி அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன.கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணி, மூன்றாமிடத்தை பிடித்தது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கல்லுாரியின் நிறுவன தலைவர் பழனிச்சாமி, கல்லுாரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், கல்லுாரியின் செயல் அறங்காவலர் சூர்யா, முதல்வர் மோகன்தாஸ் காந்தி மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X