கோவை:அவிநாசி ரோட்டில் உள்ள, சுகுணா திருமண மண்டபத்தில், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பழைய நாணயங்கள் கண்காட்சி, நாளை துவங்கி, வரும் 8ம் தேதி வரை நடக்கிறது.
கலர் கோடு நிறுவன நிர்வாகி ரவிகுமார் கூறியதாவது:கண்காட்சி அரங்கில், நுாற்றுக்கும் மேற்பட்ட, ஸ்டால்களில், வீட்டுக்கு தேவையான பர்னிச்சர், அலங்கார பொருட்கள், மற்றும் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கார்கள், காட்சிக்கு வைக்கப்படுகின்றன.பர்னிச்சர் பொருட்களுக்கு, சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கண்காட்சியில் புக் செய்யும் கார்களுக்கு, சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு விளையாட்டு அரங்குகள், பழைய நாணயங்கள் மற்றும் ஸ்டாம்ப் கண்காட்சியும் இடம்பெறுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.