பொது செய்தி

தமிழ்நாடு

சி.ஐ.எஸ்.எப்., வீரர்களால் அரசு பள்ளி வளாகம் சுத்தம்

Added : டிச 05, 2019
Advertisement
 சி.ஐ.எஸ்.எப்., வீரர்களால் அரசு பள்ளி வளாகம் சுத்தம்

மணலி:'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், மணலி,சின்னசேக்காடு அரசு பள்ளி வளாகத்தை, சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் சுத்தம் செய்தனர்.
மணலி, சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்வு, நேற்று காலை நடந்தது.இதில், மணலி சி.பி.சி.எல்., நிறுவன பாதுகாப்பு பணியில் உள்ள, மத்திய தொழிற்பாதுகாப்பு படையின், துணை கமாண்டன்ட் பாஸ்கர் நாயுடு, ஆய்வாளர் போர்டர் கேகே தலைமையிலான, சி.ஐ.எஸ்.எப்., படை வீரர்கள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பள்ளி வளாகத்தினுள், விழிப்புணர்வு பதாகை ஏந்தி, துடைப்பம் மற்றும் உபகரணங்கள் உதவியுடன், வீரர்கள், குப்பையை அகற்றினர்.வீரர்களுடன் இணைந்து, பள்ளி மாணவர்களும், துாய்மை பணியில் ஈடுபட்டனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளை ஏந்தியபடி, விழிப்புண்வு மேற்கொண்டனர்.இந்நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியை உஷா மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பங்கேற்றனர்.துாய்மை பணி, 1ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை நடக்கிறது. ஏற்கனவே, ஐ.ஓ.சி., அருகே, மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் குடியிருப்புகள் மற்றும் ஓய்வறைகள் சுத்தம்செய்யப்பட்டுள்ளன.தொடர்ச்சியாக, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் போன்ற பொது இடங்களை கண்டறிந்து, துாய்மை பணிகளை மேற்கொள்ள உள்ளதாக வீரர்கள்தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X