பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பயிற்சி முகாம் 55 பேர் பங்கேற்பு

Added : டிச 05, 2019
Share
Advertisement
சென்னை:சென்னையில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில், 55 பேர் பங்கேற்றுள்ளனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், 3ம் தேதி துவங்கியது.இதில், அரசு, மாநகராட்சி, மெட்ரிக் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, உடற்கல்வி இயக்குனர்கள்,
 ஆசிரியர் பயிற்சி முகாம் 55 பேர் பங்கேற்பு

சென்னை:சென்னையில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில், 55 பேர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், 3ம் தேதி துவங்கியது.இதில், அரசு, மாநகராட்சி, மெட்ரிக் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், 55 பேர் பங்கேற்றுள்ளனர்.முகாமில், நீச்சல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக், வாள் சண்டை, குத்து சண்டை, டேக்வாண்டோ, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில், நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள புதிய விதிமுறை மாற்றங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களால் நடத்தப்பட்டு வரும் முகாம், இன்று நிறைவு பெறுகிறது. இதில் பங்கேற்று உள்ளவர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X