பொது செய்தி

தமிழ்நாடு

இ.சி.ஆர்., - - ஓ.எம்.ஆரில் மகளிர் காவல் நிலையங்கள்

Added : டிச 05, 2019
Share
Advertisement
சென்னை:அடையாறு காவல் மாவட்டத்தை உள்ளடக்கிய, இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதியில், இரண்டு மகளிர் காவல் நிலையங்கள் திறக்க, காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.அடையாறு காவல் மாவட்டத்தில் உள்ள, 13 சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய எல்லையில், மூன்று மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இதில், குமரன்நகர், சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு ஒன்றும், மீதமுள்ள, 11 காவல் நிலையத்திற்கு, இரண்டு

சென்னை:அடையாறு காவல் மாவட்டத்தை உள்ளடக்கிய, இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதியில், இரண்டு மகளிர் காவல் நிலையங்கள் திறக்க, காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடையாறு காவல் மாவட்டத்தில் உள்ள, 13 சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய எல்லையில், மூன்று மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இதில், குமரன்நகர், சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு ஒன்றும், மீதமுள்ள, 11 காவல் நிலையத்திற்கு, இரண்டு மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.கானத்துார், நீலாங்கரை பகுதிமக்கள், அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கும், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், துரைப்பாக்கம் பகுதி மக்கள், கிண்டி மகளிர் காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டி உள்ளது.அதிக துாரம், நேர விரயம், பல நாட்கள்அலைச்சல், குற்றவாளியை பிடிப்பதில் தாமதம், விசாரணையில் தொய்வு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்.,பகுதியை மையப்படுத்தி, இரண்டு மகளிர் காவல் நிலையங்கள் திறக்க, காவல் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, இ.சி.ஆரில், கானத்துார், நீலாங்கரை, திருவான்மியூர் ஆகிய காவல் நிலையத்தை மையப்படுத்தி, ஒரு மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட உள்ளது.அதேபோல், ஓ.எம்.ஆரில், செம்மஞ்சேரி, கண்ணகிநகர், துரைப்பாக்கம் ஆகிய காவல் நிலையத்தை மையப்படுத்தி, ஒரு மகளிர் காவல் நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அரசின் அனுமதிக்காக, கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஓரிரு மாதத்தில், இரண்டு மகளிர் காவல் நிலையம் திறப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X