பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' நாளிதழ் செய்தியால் இனிதானது பயணம்! திருச்சி ரோட்டில் வந்தது மாற்றம்!

Added : டிச 05, 2019
Advertisement
 'தினமலர்' நாளிதழ் செய்தியால் இனிதானது பயணம்! திருச்சி ரோட்டில் வந்தது மாற்றம்!

கோவை:கோவை- திருச்சி ரோட்டில் மேம்பாலம் கட்டுமான பணி காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; இதனை குறைக்க, 'ஒன்-வே' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, நமது நாளிதழில் வெளியான, மாற்று பாதை திட்ட செய்தியின் அடிப்படையில், போக்குவரத்து 'ஒன்வே' செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

கோவை மாநகரில், ஒரே நேரத்தில் மூன்று மேம்பால பணிகள் நடப்பதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில், சிக்கி தவித்து வருகின்றனர். திருச்சி ரோடு சுங்கம் ரவுண்டானா அருகே, பில்லர் அமைக்கப்பட உள்ளது. இதனால், அந்த சந்திப்பில் இருந்த, போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.இதனால் கூடுதலாக ஏற்படும் நெரிசலை தவிர்க்க, நமது நாளிதழில் மாற்று திட்டம் ஒன்று வெளியிடப்பட்டது.

என்ன அந்த திட்டம்?

* திருச்சி ரோட்டில், ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரை, இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்காமல், 'ஒன்-வே' செய்ய வேண்டும்.

* ராமநாதபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள், சுங்கம் ரவுண்டானா அருகே இடதுபுறம் திரும்பி 'பைபாஸ்' ரோட்டில் சென்று, கிளாசிக் டவர் வழியாக ஜி.எச்., சிக்னலை அடைய வேண்டும்.

* மறுபுறம், அரசு மருத்துவமனையில் இருந்து சுங்கம் வரை இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் செல்லாமல், 'ஒன்-வே' செய்ய வேண்டும்.n அரசு மருத்துவமனையில் இருந்து வரும் வாகனங்கள் ரெயின்போ, சுங்கம் அடைந்து நேராக கார்மல் கார்டன் பள்ளி ரோட்டில், புலியகுளம் சென்று, பெரிய விநாயகர் கோவிலில் இருந்து வலதுபுறம் திரும்பி, பங்கஜா மில் ரோடு வழியாக ராமநாதபுரம் அடைய வேண்டும்.

இத்திட்டம் வாயிலாக, வாகன நெரிசல் குறையும் என, செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தை வரைபடத்துடன், 'சிட்டிசன் வாய்ஸ் கிளப்' உள்ளிட்ட நுகர்வோர் அமைப்பினர், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரணை சந்தித்து விவரித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, திருச்சி ரோட்டில், ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரை, ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.திருச்சி ரோட்டில் முதற்கட்டமாக, ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரை, 'ஒன்-வே' செய்யப்பட்டு உள்ளது.

சுங்கத்தில் இருந்து இடதுபுறம் திரும்பி, உக்கடம் 'பைபாஸ்' வழியாக 'கிளாசிக்' டவர் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், சுங்கம் சந்திப்பில் இருந்து ரெயின்போ வழியாக, முதல் கட்டமாக டவுன் பஸ்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 'ஹைவேஸ் காலனி' உள்ளிட்ட இடங்களில் பயணிகள் இறங்கி கொள்ள முடியும். விரைவில் அடுத்த கட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

- முத்தரசுமாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X