கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : டிச 05, 2019
Share
Advertisement
வடபழநி:குடியிருப்பிற்கு அனுமதி பெற்ற கட்டடத்தில் இயங்கி வரும், 'டாஸ்மாக்' கடையை மூட, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வடபழநி நெற்குன்றம் பாதை, கிருஷ்ணன் காலனியில், டாஸ்மாக் கடை மற்றும் பார், 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால், மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த பயனும்
 'டாஸ்மாக்' கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

வடபழநி:குடியிருப்பிற்கு அனுமதி பெற்ற கட்டடத்தில் இயங்கி வரும், 'டாஸ்மாக்' கடையை மூட, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடபழநி நெற்குன்றம் பாதை, கிருஷ்ணன் காலனியில், டாஸ்மாக் கடை மற்றும் பார், 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால், மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த பயனும் கிடைக்கவில்லை.இந்நிலையில், டாஸ்மாக் இயங்கும் கட்டடம், குடியிருப்பிற்காக அனுமதி பெற்று, வணிக பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த, எஸ்.வாசுதேவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், சட்ட விரோதமாகச் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X