சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்களால் விபத்து அபாயம்

Added : டிச 05, 2019
Advertisement
 தொழிலாளர்களால் விபத்து அபாயம்

செங்குன்றம்:சாலையை ஆக்கிரமிக்கும் தொழிலாளர்களின் அலட்சியத்தால் விபத்து, உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
செங்குன்றம் காவல் நிலையம் அருகே, தினமும் காலை, 6:30 மணி முதல், 9:30 மணி வரை, கட்டுமான வேலைக்கான, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.அங்கு, உள்ளூர் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் என, 200 பேர் வரை குவிகின்றனர். அவர்கள், வேலைக்கு அழைத்து செல்வோரின் கவனத்தை ஈர்க்க, ஜி.என்.டி., சாலையை ஆக்கிரமித்து, கூட்டமாக நிற்கின்றனர். இதனால், காலை நேரத்தில், அன்றாட பணிகளுக்காக, அவசரமாக செல்வோர், விபத்தில் சிக்கி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், வேலைக்கு ஆள் பிரிக்கும் பிரச்னையால், தொழிலாளர்கள் இடையே, அடிக்கடி மோதலும் ஏற்படுகிறது.இதனால், அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், விபத்து அச்சத்திற்கு ஆளாகின்றனர். சாலையை கடக்கும் பொதுமக்களும், விபத்தில் சிக்குகின்றனர்.இது குறித்து, செங்குன்றம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மேற்கண்ட பிரச்னையால், விபத்து, உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X