பொது செய்தி

தமிழ்நாடு

40 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்

Added : டிச 05, 2019
Advertisement
 40 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்

சென்னை:சென்னை, வேளச்சேரி நாட்டார் குளம், 40 ஆண்டுகளுக்கு பின், தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் நிரம்பி உள்ளது. இதனால், பகுதிமக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.நீர்நிலைகளை சீரமைக்க, 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என, பொதுநலச் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என, நம் நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளாக துார் வாரப்படாமல், விளையாட்டு மைதானம் போல மாறி இருந்த, சென்னை, வேளச்சேரி, நாட்டார் மற்றும் அருகில் உள்ள புளியன்கேணி குளத்தை, வேளச்சேரி பகுதி மக்கள் சேர்ந்து சீரமைக்க முடிவு செய்தனர்.கடந்த, ஜூன் - ஜூலை மாதம், 80 ஆயிரம் ரூபாய் செலவில், நாட்டார் குளம் துார் வாரப்பட்டது.
இந்நிலையில், இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, 15 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு குளங்களையும் சீரமைத்தது.நாட்டார் குளத்தில், சாலை மட்டத்தில் இருந்து, 12 அடி ஆழம் வரை துார் வாரப்பட்டது. அதோடு, நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் வகையில், குளத்தின் மையப்பகுதியில், 3 அடி ஆழம், 20 அடி சுற்றளவில், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது.துார் வாரிய மண்ணால், கரையை பலப்படுத்தி, மண் சரியாமல் இருக்க, கோணி பையால் மூடப்பட்டது.
தற்போது பெய்த வடகிழக்கு மழையில், நாட்டார் குளம் முழுமையாக நிரம்பியது.இந்த குளம், 40 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியதை பார்த்து, பகுதி மக்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க, இந்த குளம் காரணமாக இருக்கும் என, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X