தமிழ்நாடு

ஆலோசனை!செயற்கைக்கோள் புகைப்படத்துடன் விபத்துகளை கட்டுப்படுத்த....பலதுறை அதிகாரிகள் பங்கேற்பு

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:சென்னையில், விபத்துகளை கட்டுப்படுத்துவது குறித்து, செயற்கைக்கோள் புகைப்படத்தை பயன்படுத்தி, எந்தெந்த இடங்களில் விபத்து தடுப்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து, பல்வேறு துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.நாட்டில், விபத்து அதிகம் நடக்கும் நகரங்களின் பட்டியலில், சென்னையும் இடம் பிடித்துள்ளது. சென்னையில், விபத்துகளை கட்டுப்படுத்த, முதல்வர் இ.பி.எஸ்.,
 ஆலோசனை!செயற்கைக்கோள் புகைப்படத்துடன் விபத்துகளை கட்டுப்படுத்த....பலதுறை அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை:சென்னையில், விபத்துகளை கட்டுப்படுத்துவது குறித்து, செயற்கைக்கோள் புகைப்படத்தை பயன்படுத்தி, எந்தெந்த இடங்களில் விபத்து தடுப்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து, பல்வேறு துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
நாட்டில், விபத்து அதிகம் நடக்கும் நகரங்களின் பட்டியலில், சென்னையும் இடம் பிடித்துள்ளது. சென்னையில், விபத்துகளை கட்டுப்படுத்த, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை அடுத்து, நெடுஞ்சாலைத் துறை சென்னை மாநகர கோட்ட பொறியாளர் சரவண செல்வம் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகத்தில் நடந்த, இந்த ஆலோசனை கூட்டத்தில், போக்கு வரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள், ஆய்வாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள்,தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் பங்கேற்றனர். சென்னையில் விபத்தை கட்டுப்படுத்தும் தற்காலிக பணிகளை இம்மாதம், 31ம் தேதிக்குள் முடிக்க, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:செயற்கைக்கோள் புகைப்படத்தை பயன்படுத்தி, எந்தெந்த இடங்களில் விபத்து தடுப்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து, விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. முதற்கட்டமாக, தற்காலிக பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால், அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மேற்கொள்ள வேண்டிய, தற்காலிக நடவடிக்கைகள் குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனையில், போக்குவரத்து போலீசார் பல கருத்துகளை வழங்கி உள்ளனர். இது, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிஷார் பானு, என்ஃபீல்டு இருசக்கர வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் பின்னால் வரும் வாகனத்தை பார்க்கும் கண்ணாடியை சரியாக பார்த்து வண்டி ஓட்டுகிறார்களா, lane discipline பார்த்து ஓட்ட தெரிகிறதா என்பதை சோதனை செய்தே உரிமம் மற்றும் மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Cancel
05-டிச-201917:16:21 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா முக்கிய சாலைகளை தரம் உயர்த்தி, வேக விதி முறைகளை முறைப்படுத்தினாலே பாதி விபத்து குறையும். முதற்கட்டமாக நகரங்களில் இதை செய்துவிட்டு கிராமங்களில் விழிப்புணர்வை உண்டாக்கினாலே நல்ல பலன் தெரிய ஆரம்பிக்கும்.
Rate this:
Cancel
ardentchallenger - Chennai,இந்தியா
05-டிச-201910:02:58 IST Report Abuse
ardentchallenger வாகனஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிகளை ம்முறையாக அமுல்படுத்தினாலே விபத்துகள் குறையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X