கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜீவா நகரில் தனி நபர் ஆக்கிரமிப்பு மாநகராட்சிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Added : டிச 05, 2019
Advertisement

கோவை:கோவை, கவுண்டம்பாளையம், ஜீவா நகரில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்புகளை இன்னும் அகற்றாமல், காலம் தாழ்த்துவது ஏன் என கேள்வி கேட்டு, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு, ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம் அருகே, ஜீவா நகர் உள்ளது. சங்கனுார் ஓடையின் கரையில் வண்டிப்பாதையாக இருந்த இடத்தை, 252 பேர் ஆக்கிரமித்து, வீடு கட்டி வசித்தனர்.ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச் சங்கத்தினர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாற்று இடம் வழங்கி விட்டு, அவற்றை அகற்ற உத்தர விட்டனர்.குடிசை மாற்று வாரியம் மூலம் கீரணத்தத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீடு ஒதுக்கியதும், ஆக்கிரமிப்பு வீடுகள் படிப்படியாக இடிக்கப்பட்டன.இவ்வழித்தடத்தில் ஐந்து கோவில்கள் உள்ளன. தனி நபர் ஆக்கிரமிப்புகள் இன்னமும் இருக்கின்றன.நடுரோட்டில் மின் கம்பங்கள் இருக்கின்றன. அவற்றை ஓரமாக இட மாற்றம் செய்யவில்லை. மழை நீர் வடிகால் ரோட்டின் மையத்தில் இருக்கிறது. இவற்றை ரோட்டோரத்துக்கு மாற்றி கட்ட வேண்டும். மாநகராட்சி தரப்பில், எவ்வித பணியும் மேற்கொள்ளாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து தடாகம் ரோடு வரை, ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றினால், 2.6 கி.மீ., துாரத்துக்கு, 15 அடி அகல ரோடு, 60 அடிக்கு விசாலமாகும். ஆனால், 1.3 கி.மீ., துாரத்துக்கே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.மீதமுள்ள பகுதியில் அகற்ற, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம், அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தனர்.

எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு, மாநகராட்சி எடுத்த நடவடிக்கை, கோவில்கள் மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றாததற்கு காரணம் கேட்டு, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அடுத்த கட்ட விசாரணை, வரும், 17க்கு ஒத்திவைத்துள்ளது. அதற்குள், மாநகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X