பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் நன்னடத்தை விதிமுறை மாநகராட்சிக்கு பொருந்தாது

Added : டிச 05, 2019
Advertisement

கோவை:ஊரக பகுதிகளுக்கே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால், அடிப்படை பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் எப்போதும் போல் மனு கொடுக்கலாம்.புதன்தோறும் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன.

ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவதில்லை.மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்படாததால், நன்னடத்தை விதிமுறை பொருந்தாது.

ஆகவே, வழக்கம்போல் நேற்று குறைகேட்பு கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது.துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். மாநகராட்சிக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது என்பதால், தொடர்ந்து ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை மனு கொடுக்கலாம் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X