சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி வரதட்சணை புகார் கணவர் அதிரடி கைது

Added : டிச 05, 2019
Share
Advertisement
கோவை:கோவை, கணபதி, சக்தி நகரை சேர்ந்தவர் மோனிஷா, 27. புலியகுளத்தில் வங்கியில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வடிவரசன், 34. திருநாரையூரிலுள்ள ஒரு வங்கியில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார்.தம்பதி இணைந்து வங்கியில் கடன் பெற்று, சொந்த வீடு வாங்கினர். வீடு வாங்கிய சில மாதங்களில் கணவர், 'தனது தங்கை மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளார். அதனால் வீட்டை அவரது பெயருக்கு

கோவை:கோவை, கணபதி, சக்தி நகரை சேர்ந்தவர் மோனிஷா, 27. புலியகுளத்தில் வங்கியில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வடிவரசன், 34. திருநாரையூரிலுள்ள ஒரு வங்கியில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார்.
தம்பதி இணைந்து வங்கியில் கடன் பெற்று, சொந்த வீடு வாங்கினர். வீடு வாங்கிய சில மாதங்களில் கணவர், 'தனது தங்கை மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளார். அதனால் வீட்டை அவரது பெயருக்கு எழுதி கொடுத்து விடலாம்' என, தெரிவித்தார். மோனிஷா ஒப்புக்கொள்ள மறுத்ததால், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது.இதுகுறித்து மாநகர அனைத்து மகளிர் கிழக்கு பகுதி போலீசில், மோனிஷா புகார் அளித்தார். புகாரின்பேரில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், வடிவரசனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X