தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் இருந்து, உள்ளாட்சி தேர்தலுக்காக, ஓட்டுபெட்டிகள் ஆனைமலை ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்டன.கடந்த முறை உள்ளாட்சி தேர்தலுக்காக, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, தொண்டாமுத்துார் ஒன்றியத்திற்கு ஓட்டு பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அதில், தொண்டாமுத்துார் ஒன்றிய தேர்தலுக்கு, தேவையானதை விட அதிகமாக இருந்த ஓட்டுபெட்டிகள், நேற்று ஆனைமலை ஒன்றியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனைமலைக்கு, 133 ஓட்டு பெட்டிகள், போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.