சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் தலை துாக்கிய ரேஷன் அரிசி கடத்தல்

Added : டிச 05, 2019
Advertisement

கோவை:கோவையில் கடந்த சில மாதங்களாக, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி கடத்தல் மீண்டும் தலை துாக்கியுள்ளது.

பூமார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் அருகே, ஆட்டோக்களில் ரேஷன் அரிசி கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக, மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில், வழங்கல் துறை பறக்கும்படை தாசில்தார் சிவக்குமார் தலைமையில், அப்பகுதிக்கு சென்று திடீர் தணிக்கையில் இறங்கினர்.

அப்போது, 9 சாக்குப்பைகளில், 225 கிலோ எடை கொண்ட ரேஷன் புழுங்கல் அரிசி கடத்தி செல்லப்பட்டது தெரிந்தது.உடனடியாக அரிசி மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, பொள்ளாச்சி உணவு வழங்கல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.ஆட்டோ டிரைவர் மற்றும் அரிசியை கடத்தி சென்ற இருவரும் தப்பிச்சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X