சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவன மேலாளர் மாயம்

Added : டிச 05, 2019
Advertisement

அண்ணாசதுக்கம்: அம்பத்துார், விவேகானந்தர் நகர், குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர், ராகேஷ் வர்ஷன், 40; தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி, ஜெயந்தி, 36. இவர், நேற்று முன்தினம் மாலை, குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு சென்றார். கண்ணகி சிலை அருகே கடலில் குளித்தபோது, அலையில் சிக்கி, ராகேஷ் வர்ஷன் மாயமானார். அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.மென் பொறியாளர்களிடம் வழிப்பறிபம்மல்: பம்மல், சங்கர் நகரைச் சேர்ந்தவர்கள் ஜெயச்சந்திரன், 33, பிரவீன்குமார், 28, இருவரும், முறையே, தரமணி, கிண்டியில் உள்ள தனியார் நிறுவனங்களில், மென் பொறியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பணி முடிந்து, நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு, தனித்தனி இருசக்கர வாகனங்களில், வீடு திரும்பினர். சங்கர் நகர், பிரசாந்த் காலனி அருகே வந்தபோது, இரண்டு வாகனங்களில் வந்த, நான்கு பேர், இருவரையும் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, மோதிரம், ரொக்கம், மொபைல் ஆகியவற்றை பறித்து தப்பினர். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரிடம் மொபைல் பறிப்பு
வேப்பேரி: புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர், கவுதம் சுந்தர், 28; ஐ.டி., நிறுவன ஊழியர். இவர், 1ம் தேதி இரவு, வேப்பேரி, தாணா தெரு வழியாக நடந்து சென்றார். அங்கு, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். இதுகுறித்து, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம், கவுதம் சுந்தர் புகார் தெரிவித்து சென்றார். வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை.l நீலாங்கரை: நீலாங்கரையைச் சேர்ந்தவர், கண்ணியப்பன், 22. நேற்று முன்தினம், அக்கரை கடற்கரையில் நண்பர்களுடன் நின்றபோது, அங்கு வந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி, கண்ணியப்பனிடம் இருந்த, மொபைல் போனை பறித்து தப்பினர். நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி
செங்குன்றம்: செங்குன்றம், எல்லம்மன்பேட்டையில், 'ஒன் இந்தியா' என்ற வங்கியின், ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணி அளவில், மர்மநபர், அதை உடைப்பதாக, சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்குன்றம் போலீசார் அங்கு சென்றபோது, பீஹாரைச் சேர்ந்த பரத்கிரி, 20, என்பவர் சிக்கினார். அவர், அங்குள்ள இரும்பு தொழிற்சாலையில், வேலை செய்து வந்துள்ளார். மது போதையில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணம் கொள்ளை அடிக்க முயன்றது தெரிய வந்தது. செங்குன்றம் போலீசார் அவரை கைது செய்தனர்.
இருதரப்பு பழிக்குப்பழியாக மோதல்
பேசின்பாலம்: புளியந்தோப்பு, காந்தி நகரைச் சேர்ந்தவர், சங்கர், 34. இவரது, 13 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன், 45, என்பவர், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். இது குறித்து, சங்கர், கமலக்கண்ணனிடம் நேற்று முன்தினம் இரவு, புளியந்தோப்பு, ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் மற்றும் ஆறு பேர் சேர்ந்து, சங்கரை அரிவாளால் வெட்டினர். இதற்கு பழிக்குப்பழியாக கமலக்கண்ணன் மற்றும் ரஜினி, 40, என்பவரை, சங்கர் தரப்பு அரிவாளால் தாக்கி உள்ளனர். பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரை வெட்டிய மூவர் கைது
கோயம்பேடு: கோயம்பேடைச் சேர்ந்தவர் தினேஷ், 23. இவரது நண்பர் அசாருதீன், 23. இருவரும், நேற்று முன்தினம் நள்ளிரவு, கோயம்பேடு, கீரை மார்க்கெட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்றனர். அப்போது, டூ - வீலரில் வந்த, ஆறு பேர், இருவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர்கள் மறுக்கவே, கத்தியால் இருவரையும் வெட்டி தப்பினர். கோயம்பேடு போலீசாரின் விசாரணையில், இருவரையும் வெட்டியது, நெற்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷ், 24, உட்பட மூவர் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர்.
வாலிபரை கடத்தியவருக்கு, 'கம்பி!'
ஆயிரம்விளக்கு: திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர், மாமூன், 22. இவர், ஆயிரம்விளக்கு, வேலர்ஸ் கார்டனில் உள்ள ஓட்டலில், வெயிட்டராக பணிபுரிகிறார். 2ம் தேதி மாலை, பணி முடித்து வெளியே சென்றபோது, காரில் வந்த, நான்கு பேர் கும்பல், மாமூனை கடத்தி, அவரது பெற்றோரைப் போனில் அழைத்து, '5 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான், உங்கள் மகனை விடுவிப்போம். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம்' என, மிரட்டியதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர்களிடமிருந்து தப்பிய மாமூன், ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய், 25, என்பவரை கைது செய்தனர்.காதலித்து ஏமாற்றியவருக்கு, 'காப்பு!'வில்லிவாக்கம்: கொளத்துாரைச் சேர்ந்த, 25 வயது பெண்ணை, விழுப்புரத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி, 26, என்பவர், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்னொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக, புண்ணியமூர்த்தி கூறி உள்ளார். ஏமாற்றப்பட்ட பெண்ணின் புகாரையடுத்து, வில்லிவாக்கம் மகளிர் போலீசார் விசாரித்தனர். இதில், அவர் வேறு பெண்ணைத் திருமணம் செய்தது தெரிய வந்தது. காதலித்த பெண்ணை ஏமாற்றி, வேறு பெண்ணைத் திருமணம் செய்த புண்ணியமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க., பிரமுகர் கைது
அண்ணா சாலை: ராயப்பேட்டையைச் சேர்ந்தவர், முகமது முஸ்தபா. அண்ணா சாலை, ஜி.பி.சாலையில், ஓட்டல் நடத்தி வருகிறார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர், விஜயகுமார்; அ.தி.மு.க., பிரமுகர். இவர், ஓட்டலில் அடிக்கடி உணவு அருந்தி, பணம் தராமல் மிரட்டி உள்ளார். நேற்று முன்தினம் ஓட்டலுக்கு சென்ற விஜயகுமார், 10 ஆயிரம் ரூபாய் வேண்டும் என, கேட்டுள்ளார். அவர் மறுக்கவே, அவரது பாக்கெட்டிலிருந்து, 2,000 ரூபாயை பறித்ததுடன், மீதமுள்ள, 8,000 ரூபாயை, மாலைக்குள் தர வேண்டும் என, மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. அண்ணா சாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X