வேலைவாய்ப்பு முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு முகாம்

Added : டிச 05, 2019

சென்னை:தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.சென்னை, கிழக்கு தாம்பரத்தில், ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் தாம்பரம் சென்ட்ரல் மற்றும் முன்னணி நிறுவனங்கள் இணைந்து, வரும், 8ம் தேதி, மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றனர். இம்முகாம் காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணிவரை நடக்கிறது.இதில், 30க்கும் மேற்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ., டெக் மகேந்திரா, எச்.டி.எப்.சி., ஏபிடி மாருதி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்கிறது. எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்த, 18 - 35 வயதுடையவர்களுக்காக நடத்தப்படும் இந்த முகாமில், அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X