சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடங்கமாட்றாங்கய்யா... மாநகராட்சி அதிகாரி கைது

Added : டிச 05, 2019
Advertisement
 அடங்கமாட்றாங்கய்யா...  மாநகராட்சி அதிகாரி கைது

கொடுங்கையூர்:சாலையை தோண்ட அனுமதி அளிக்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, தண்டையார்பேட்டை மாநகராட்சி உதவி பொறியாளர் மணிகண்டனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கொடுங்கையூர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர், நரேந்திரபாபு, 60. இவர் தன் வீட்டிற்கு, கழிவுநீர் குழாய் பதிக்க, சாலையை தோண்ட அனுமதி கேட்டு, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில், இரு மாதத்திற்கு முன் விண்ணப்பித்துள்ளார்.தண்டையார்பேட்டை, 34வது வார்டு, உதவி பொறியாளர் மணிகண்டன், 37, என்பவர், அனுமதி வழங்காமல், மாதக்கணக்கில் இழுத்தடித்துள்ளார். பின், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், அனுமதி தருவதாக கூறியுள்ளார்.இதற்கு சம்மதித்த நரேந்திரன், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவிக்க, பணத்துடன், கொடுங்கையூர், வெங்கடேஷ்வரா நகர், 34வது வார்டு அலுவலகத்திற்கு வருமாறு, மணிகண்டன் தெரிவித்துள்ளார்.நேற்று மாலை, வார்டு அலுவலகம் சென்ற நரேந்திரன், 10 ஆயிரம் ரூபாயை மணிகண்டனிடம் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் குமரகுருபரன் தலைமையிலான போலீசார், மணிகண்டனை கையும், களவுமாக பிடித்தனர்.அவரை, ஐகோர்ட்டில் உள்ள, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X