சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடை ஊழியரை அடித்த எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

Added : டிச 05, 2019
Share
Advertisement
ஆயிரம் விளக்கு:மொபைல் கடை ஊழியரை கன்னத்தில் அடித்த, காவல் உதவி ஆய்வாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர், ராஜபாண்டி.இவர், நேற்று முன்தினம், அண்ணா சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில், திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்றார். பின், அங்குள்ள மொபைல் கடைக்கு சென்றவர், 'ஹெட்போன்'

ஆயிரம் விளக்கு:மொபைல் கடை ஊழியரை கன்னத்தில் அடித்த, காவல் உதவி ஆய்வாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர், ராஜபாண்டி.இவர், நேற்று முன்தினம், அண்ணா சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில், திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்றார். பின், அங்குள்ள மொபைல் கடைக்கு சென்றவர், 'ஹெட்போன்' வாங்க, அதன் விலை குறித்து விசாரித்தார்.கடை ஊழியர் கூறிய விலை, 'ஆன்லைன்' விலையைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி, தகராறு செய்தார்.அப்போது, கடை ஊழியருக்கும், உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜபாண்டி, மொபைல் கடை ஊழியரின் கன்னத்தில் அடித்தார். இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகளிடம், மொபைல் கடை உரிமையாளர் புகார் அளித்தார்.இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ராஜபாண்டியை, 'சஸ்பெண்ட்' செய்து, கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் ஆர்.சுதாகர் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X