கொசு ராஜ்ஜியம்
திருப்பூர் மாநகராட்சி 17வது வார்டு, கஞ்சம்பாளையத்தில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. விஷ காய்ச்சல் தாக்கும் முன், சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
--எஸ்.சண்முகம், கஞ்சம்பாளையம்.
உடைந்தது தடை
முருகம்பாளையம், சூர்யா நகரில் உள்ள ஒரு பேன்சி கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா வகைகள் விற்கப்படுகின்றன. அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும்.-
-டி.ராமசாமி, சூர்யா நகர்.
ரோடு செல்வதற்கல்ல...
திருப்பூர் சிக்கண்ண செட்டியார் வீதியில், ரோட்டை ஆக்கிரமித்து சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன; போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.-
-எம்.வின்சென்ட் ராஜ், திருப்பூர்.
மூக்கு ஜாக்கிரதை
திருப்பூர் நெசவாளர் காலனி, ஜவகர் நகர் மூன்றாவது வீதியில், குப்பை தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள், கொசு அதிகரித்துள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்றவேண்டும்.
--ஆர்.ராஜகோபால், நெசவாளர் காலனி.