அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனம், பாண்டியன் நகரில் உள்ள ஒரு நிறுவனம் மூலம், ஜாப் ஒர்க் முறையில், ஆயத்த ஆடைகளை தயாரித்து, துபாய்க்கு அனுப்பிவைத்தது. ஆடையில் குறைபாடுகள் உள்ளதாக துபாய் நிறுவனம், புகார் அளித்தது. இதையடுத்து, அனுப்பர்பாளையம் நிறுவனம், பாண்டியன் நகர் ஜாப் ஒர்க் நிறுவனத்துக்கு ரூ.9.30 லட்சத்தை வழங்கவில்லை.பாண்டியன் நகர் நிறுவனம் அளித்த புகாரை, தலைவர் கருணாநிதி தலைமையிலான, ஆர்பிட்ரேஷன் கவுன்சில், விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இருதரப்பினரிடமும், கவுன்சில் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை. வரும் 17ம் தேதிக்கு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.