சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய வாழ்த்து திருவான்மியூரில், 'தமாஷ்'

Added : டிச 05, 2019
Advertisement

திருவான்மியூர்:சகோதரிக்கு, திருமண நாள் வாழ்த்து கூறியது, வெடிகுண்டு புரளியாக மாறியதால், திருவான்மியூரில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவான்மியூர், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 80. இவரது மனைவி வசந்தி, 70. இவர்கள், 35வது திருமண நாளை, நேற்று வீட்டில் சிறப்பித்தனர். தென்காசியைச் சேர்ந்த வசந்தியின் சகோதரர் ரவி, 55. இவர், மொபைல் போனில், வசந்திக்கு நேற்று வாழ்த்து கூறி உள்ளார்.அதிர்ச்சிவசந்திக்கு, காது சரியாக கேட்காததால், ரவியிடம் போனில் பேசிய போது, 'என்ன... என்ன...' என, கேட்டுள்ளார்.இதில், பொறுமை இழந்த ரவி, 'உன் காதில் வெடிகுண்டு வைக்க' என, அதிக சத்தத்தில் பேசி, இணைப்பை துண்டித்துள்ளார். ரவி பேசியதில், 'வெடிகுண்டு வைக்க' என்ற வார்த்தை மட்டும், வசந்திக்கு கேட்டுள்ளது. உடனே பதற்றமடைந்த வசந்தி, தன் மகள் சுமித்ராவிடம், 'நம்ம வீட்டில் வெடிகுண்டு வைக்க போறாங்களாம்' என, கூறி உள்ளார். வாழ்த்து கூற வந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், சுமித்ரா, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சிரிப்பலை
திருவான்மியூர் போலீசார், போலீஸ் படையுடன், சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றனர். வசந்தி மொபைல் போனில், ரவியின் உரையாடல் பதிவை போலீசார் கேட்டனர்.அதன் பின் தான், ரவி என்ன பேசினார் என, தெரிந்தது. நடந்ததை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்த பின், போலீசார் நிம்மதி அடைந்ததுடன், நடந்த சம்பவத்தை நினைத்து சிரித்துக் கொண்டனர்.இந்த சம்பவத்தால், திருவான்மியூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X