தமிழ்நாடு

'தடம்புரண்டது' ரயில்வே!இழுத்து மூடப்பட்ட வஞ்சிபாளையம் சரக்கு முனையம்: அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் அவலம்

Added : டிச 05, 2019
Advertisement
 'தடம்புரண்டது' ரயில்வே!இழுத்து மூடப்பட்ட வஞ்சிபாளையம் சரக்கு முனையம்: அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால்  அவலம்

திருப்பூர்:போதிய வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து தராததால், சேவை துவங்கிய இரு வாரங்களில், வஞ்சிபாளையம் சரக்கு முனையம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

தனியார் சிமென்ட் நிறுவனம், சங்ககிரியில் இருந்து ஈரோடு, கோவை மற்றும் கேரளாவுக்கு ரயில் மூலம், சிமென்ட் அனுப்பி வருகிறது. அதிகளவில் சிமென்ட் அனுப்புவதால், இந்நிறுவனத்துக்கென, தனி 'வேகன்'கள், வழங்கப்பட்டுள்ளன.ஈரோடு அல்லது திருப்பூரில் சரக்குகளை இறக்கி, அங்கிருந்து, கோவை வழியாக கேரளாவுக்கு லாரியில் கொண்டு செல்ல, சிமென்ட் நிறுவனம் திட்டமிட்டது.

தெற்கு ரயில்வே வணிகப்பிரிவு உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்ததன் அடிப்படையில், கடந்த மாதம், 21ம் தேதி திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில் புதிய சரக்கு முனையம் துவங்கப்பட்டது.அன்றைய தினம், வஞ்சிபாளையத்துக்கு, 21 வேகன்களுடன் வந்த சரக்கு ரயிலை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பராவ், மூத்த வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து வரவேற்றனர்.

வேகனில் இருந்து சிமென்ட் மூட்டைகள் இறக்கப்பட்டு, லாரிகள் மூலம் மூன்று நாட்களாக அனுப்பி வைக்கப்பட்டது.ஒருமுறை வேகன் வந்தால், நான்கு லட்சம் ரூபாய் வருவாய் ரயில்வேக்கு கிடைக்கும். ஆனால், கடந்த இரு வாரங்களாக சங்ககிரியில் இருந்து சிமென்ட் ஏற்றி 'வேகன்கள்' வஞ்சிபாளையம் வரவில்லை. மாறாக கோவை, ஈரோட்டில் சிமென்ட் இறக்கப்படுகிறது.

புதிதாக திறக்கப்பட்டதாக கூறப்படும் சரக்கு முனையம் அறிவிப்பு பலகை கூட இல்லாமல் காணாமல் போயுள்ளது.வஞ்சிபாளையம் ஸ்டேஷன் மாஸ்டர் மோஹிந்தர் சிங் கூறுகையில், 'தனியார் சிமென்ட் நிறுவனம், சிமென்ட் இறக்க, பாதுகாப்பான இடத்தை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, சரக்கு ரயில் வந்து நிற்கும் பிளாட்பார்ம்கள் உயரமாக இருக்க வேண்டும். மழை, வெயிலில் நனையாதவாறு கூரை வேயப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.தெற்கு ரயில்வே - தனியார் சிமென்ட் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சு முடிவுற்ற பிறகே மீண்டும் சரக்குகள் வரும்,' என்றார்.


ஏன் இந்த அவசரம்!


வஞ்சிபாளையத்தில் இரு பிளாட்பார்ம்கள் உள்ளன. இதில், திருப்பூர் - கோவை வழித்தடத் தண்டவாளத்தில் மட்டும் பிளாட்பார்ம் உள்ளது. கோவை - திருப்பூர் மார்க்கத்தில் பிளாட்பார்ம் இல்லை.தவிர ஸ்டேஷனை சுற்றி சுற்றுச்சுவர், பொருட்களை இறக்கி வைக்க போதிய துாய்மையான இடம், அறை வசதி இல்லாததால், தனியார் சிமென்ட் நிறுவனம் தங்கள் பொருள் பாதுகாப்பாக இருக்குமா என சந்தேகித்து பொருட்களை அனுப்ப தயங்குகிறது. ரயில்வே அதிகாரிகள் அதற்கான வசதியை செய்து கொடுத்த பின் சரக்கு முனையம் திறந்திருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X