பொது செய்தி

தமிழ்நாடு

2ம் பருவ தேர்வு 11ல் துவக்கம்

Added : டிச 05, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 -9ம் வகுப்பு மாணவர்களுக்கான, இரண்டாம் பருவ தேர்வு வரும் 11ல் துவங்குகிறது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் வெளியிட்ட பருவத்தேர்வு அட்டவணையில், 'ஆறாம் வகுப்பு, மாணவருக்கு, வரும் 13ம் தேதி - தமிழ்; 16ம் தேதி ஆங்கிலம், 17ம் தேதி - கணிதம், 19ம் தேதி -அறிவியல், 20ம் தேதி - உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, 23ம் தேதி - சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் தேர்வு நடக்கிறது.

எட்டாம் வகுப்புக்கு ஆங்கிலம் தேர்வு, 14ம் தேதியும், பிற பாடங்களுக்கு மேற்கண்ட தேதியிலும் தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி பிற்பகல், 12:30 மணி வரை நடக்கிறது.ஏழாம் வகுப்பு மாணவருக்கு, வரும் 12ம் தேதி - தமிழ்; 14ம் தேதி - ஆங்கிலம்; 17ம் தேதி கணிதம்; 19ம் தேதி - அறிவியல்; 20ம் தேதி - உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி; 23ம் தேதி - சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.'ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு, 11ம் தேதி - தமிழ்; 13ம் தேதி - ஆங்கிலம்; 17ம் தேதி கணிதம்; 19ம் தேதி - அறிவியல்; 20ம் தேதி - உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி; 23ம் தேதி - சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுகள் மதியம், 2:00 முதல், மாலை, 4:30 மணி வரை நடத்தப்பட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X