பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலாவுக்கு மாணவர்கள் தயார்

Added : டிச 05, 2019
Advertisement

பள்ளி மாணவ, மாணவியருக்கு சுற்றுலா செல்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் ஒருநாள் கல்வி சுற்றுலா வரும், 7ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி, பெருமாநல்லுார் மற்றும் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள், 150 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சித்தம்பலம் கோவில், உடுமலை நாராயணகவி நுாலகம், திருமூர்த்தி மலை பூங்கா, அமணலிங்கேஸ்வரர் கோவில், அமராவதி முதலை பண்ணை ஆகியவற்றை பார்வையிட உள்ளனர்.
முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ஜனார்த்தனன், இப்பயணத்தை துவக்கி வைக்கின்றனர். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருஙகிணைப்பாளர் ராமகிருஷ்ணன் உடன் செல்ல உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X