பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இவ்வழியே, சென்னை தி.நகர், கோயம்பேடு, பூந்தமல்லியிலிருந்து, பேரம்பாக்கம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கு, மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்களை பயன்படுத்தி, மப்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள உழுந்தை, சமத்துவபுரம், காட்டு கூட்டு ரோடு, மண்ணுார், வயலுார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர்
 அரசு பஸ்சில் ஆபத்தான பயணம்

மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இவ்வழியே, சென்னை தி.நகர், கோயம்பேடு, பூந்தமல்லியிலிருந்து, பேரம்பாக்கம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கு, மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களை பயன்படுத்தி, மப்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள உழுந்தை, சமத்துவபுரம், காட்டு கூட்டு ரோடு, மண்ணுார், வயலுார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பேரம்பாக்கம் மற்றும் கீழச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதில், பள்ளி நேரங்களில், போதிய மாநகர பஸ் இல்லாததால், மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பள்ளி நேரங்களாகிய காலை மற்றும் மாலை நேரங்களில், குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுவதால், மாணவ - மாணவியர் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்று வருகின்றனர்.எனவே, மாநகர பஸ் நிர்வாகம், காலை மற்றும் மாலை வேளைகளில், கூடுதல் பஸ்களை இயக்க வேணடும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X