பொது செய்தி

தமிழ்நாடு

'டாண் டாண்' என பதில் அளித்த மாணவர்கள்! 'பட்டம்' வினாடி வினாவில் 'தூள்' கிளப்பீட்டாங்க...

Added : டிச 05, 2019
Advertisement
 'டாண் டாண்' என பதில் அளித்த மாணவர்கள்! 'பட்டம்' வினாடி வினாவில் 'தூள்' கிளப்பீட்டாங்க...

பல்லடம்:'தினமலர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த வினாடி வினா போட்டியில், தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், தங்கள் அறிவு திறனை வெளிப்படுத்தினர்.

தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற வினாடி வினா போட்டியை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடத்தி வருகிறது.ஒவ்வொரு பள்ளியிலும், முதலிடம் பெறும் இரு மாணவர்கள், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவர். இறுதிப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு, அமெரிக்காவில் உள்ள 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை, நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இதுவரை, 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தகுதி சுற்று போட்டிகள் முடிந்துள்ளன.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்த தகுதி சுற்று தேர்வில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, 200 மாணவர்கள் பங்கேற்று, தேர்வெழுதினர். அதில், சிறப்பாக பங்காற்றிய, 16 பேர், ஏ, பி, சி, டி, இ, எப், ஜி, எச் என, எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர்.'ஏ' அணியில் ஆதித்யன், -நகுல், 'பி' அணியில் யோகேஷ்-, நிஷான், 'சி' அணியில் ரகுநாதராஜ், -ஹபினேஷ், 'டி' அணியில் ஸ்ரீலிதேஸ், -மிதிலன், 'இ' அணியில் கவின்-, சிரஞ்சீவி, 'எப்' அணியில் கதிர், -பிரஜித் விஷ்ணு, 'ஜி, அணியில் செல்வ கவுரவ்-, ஆல்வின் ஜியோல், 'எச்' அணியில் தேவராஜ்-, நந்தகுமார் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்த அணிகளுக்கு மூன்று சுற்றுகளாக, வினாடி -வினா போட்டி நடத்தப்பட்டது.இறுதியில், 'ஏ' அணியை சேர்ந்த ஆதித்யன், -நகுல் ஆகியோர் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவருக்கு, பள்ளி துணை முதல்வர் செல்வராணி, 'தினமலர்' கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். ஆசிரியைகள் பானு, அமுதா, ரேவதி ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். பள்ளிச் செயலாளர் பூபதி மற்றும் முதல்வர் அல்லிராணி ஆகியோர், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு, பாராட்டு தெரிவித்தனர்.

சிந்து மெட்ரிக்தாராபுரம் சிந்து மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில், 250 மாணவ மாணவியர் பங்கேற்று தேர்வெழுதினர். அதில், 'ஏ' அணியில் சரண், -ராகுல், 'பி' அணியில் அகிலன், -பிரதீப், 'சி' அணியில் செரிஸ் பெஞ்சமின் தேவ்,-கோகுல், 'டி' அணியில் கார்த்திக் குமார், -தருண் குமார்,'இ' அணியில் இனிஷ் கிரிதின், -ரோகித், 'எப்' அணியில் முகம்மது நியாஸ், -சிவ சந்தோஷ், 'ஜி' அணியில் கோகுல்-, பிரனேகா, 'எச்' அணியில் அனுஷ்யா-, விஷ்ணு பிரபா ஆகிய, 16 பேரும் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக வினாடி -வினா போட்டி நடத்தப்பட்டது.

இறுதியில், 'இ' அணியை சேர்ந்த இனிஷ் கிரிதின், -ரோகித் ஆகியோர் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவருக்கு, பள்ளி நிறுவனர் கோபாலன், முதல்வர் கணேசன் ஆகியோர் 'தினமலர்' கேடயம், மெடல், மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். ஆசிரியைகள், கார்த்திகா, திலகவதி மற்றும் முனீஸ்வரி ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். 'பட்டம்' வினாடி வினா போட்டியில், வினாக்களுக்கு இரு பள்ளி மாணவர்களும் உடனுக்குடன் பதில் அளித்து, அசத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X