பொது செய்தி

தமிழ்நாடு

'நம்ம ஊர்ல யாரு நிக்கறாங்கோ!' கிராமங்களில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019
Advertisement

திருப்பூர்:ஊரக உள்ளாட்சிகளுக்கான மனு தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன.

ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல், வரும், 27, 30ம் தேதிகளில் நடக்கிறது. நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. முதல் கட்டமாக, திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனுார், தாராபுரம் ஒன்றியங்களுக்கும்,

இரண்டாம் கட்டமாக, அவிநாசி, பொங்கலுார், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. நாளை, வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர், அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு, ஒன்றிய அலுவலகங்களிலும், மனுத்தாக்கல் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கான தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர், விஜய கார்த்திகேயன் பேசியதாவது:விரைவில் பறக்கும் படை அமைக்கப்படும். இரண்டு ஒன்றியங்களுக்கு ஒரு பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்படும். பெரிய ஒன்றியமாக இருந்தால், கூடுதல் பறக்கும்படை அமைக்கப்படும்.

மூன்று 'ஷிப்ட்'முறையில், அதாவது 24 மணி நேரமும் இயங்கும் வகையில், பறக்கும்படை அமைக்கப்படும். மின்வாரிய அதிகாரிகள், முன்கூட்டியே திட்டமிட்டு, ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளன்று, தடையில்லாமல் மின்வினியோகம் செய்ய வேண்டும். தாசில்தார்கள், தீயணைப்புத்துறை என, அனைத்து அரசுத்துறையினரும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் பணிக்கான, கண்காணிப்பு அலுவலர்கள், 'வாட்ஸ் ஆப்'குழுக்களை உருவாக்கி, அதன் வாயிலாக, தேர்தல் பணிகளை தொடர்ந்து கண்காணித்து, வழிகாட்ட வேண்டும் இவ் வாறு, கலெக்டர் பேசினார்.

ஊராட்சிகளில் 'நம்ம ஊர்ல யாரு தேர்தல்ல நிக்கறாங்களோ' என்று பொதுமக்கள் பரபரப்பாக பேசிக்கொள்கின்றனர்.


தேர்தல் நடக்குமா?


தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள வேட்பாளர்கள், நாளை காலை 10:00 மணிக்கு பிறகே, வேட்புமனு படிவங்களை பெற முடியும். தேர்தல் நடக்குமா என்ற நம்பிக்கை மக்களிடமும், கட்சியினரிடமும் வரவில்லை நகர உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏமாற்றமாக இருக்கிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வருவதால், அரசியல் கட்சியினர் கவலையுடன் காத்திருக்கின்றனர்.


279 பதட்டமான ஓட்டுச்சாவடி


மாவட்டத்தில், ஊரகப்பகுதியில், 279 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் நாளில், முழு நடவடிக்கையும், வீடியோ பதிவு செய்யப்படும். ஓட்டுச்சாவடி உள்நடவடிக்கை, 'வெப் கேமரா' மூலமாகவும் கண்காணிக்கப்படும். பதட்டமான சாவடிகளில், 'மைக்ரோ அப்சர்வர்'கள் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற, வங்கிகள், எல்.ஐ.சி., மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர், 'மைக்ரோ அப்சர்வர்'களாக நியமிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X