பொது செய்தி

தமிழ்நாடு

பல்லாங்குழியான போளிவாக்கம் சாலை

Added : டிச 05, 2019
Advertisement
 பல்லாங்குழியான போளிவாக்கம் சாலை

போளிவாக்கம்:போளிவாக்கம் அருகே, பல்லாங்குழியான நெடுஞ்சாலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ளது, கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட போளிவாக்கம். இந்த நெடுஞ்சாலையில், அரசு, தனியார், தொழிற்சாலை பஸ், கனரக வாகனங்கள் என, தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில், போளிவாக்கம், மேல்நல்லாத்துார், செங்காடு, தொடுகாடு உள்ளிட்ட பல பகுதிகளில் நெடுஞ்சாலை சேதமடைந்து, பல்லாங்குழிகளாக மாறியுள்ளன.இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர், கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.சில நேரங்களில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
குறிப்பாக, இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.இந்த சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர், பல்லாங்குழியாக மாறியுள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X