பொது செய்தி

தமிழ்நாடு

வெல்லம் தயாரிப்பதில் விவசாயிகள் அவதி

Added : டிச 05, 2019
Advertisement
 வெல்லம் தயாரிப்பதில் விவசாயிகள் அவதி

ஆர்.கே.பேட்டை:வெல்லம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள கரும்பு விவசாயிகள், பாகு காய்ச்சும் எரிபொருளை வெயிலில் உலர்த்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
களத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், கரும்பு சக்கையை சாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.கரும்பு விவசாயம் மற்றும் வெல்லம் தயாரிப்பில், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதி விவசாயிகள் கைதேர்ந்தவர்களாக விளங்கி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், பரவலாக கரும்பு பயிரிடப்பட்டாலும், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் மட்டுமே வெல்லம் தயாரிக்கப்பட்டு வருகிறது.பாரம்பரியமாக வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள், ஆண்டு முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம், தொழில் வாய்ப்பையும், வருவாயையும் நிலையாக வைத்துள்ளனர்.வெல்லம் தயாரிப்பில், கரும்பு பாகு காய்ச்சி, வெல்லம் தயாரிப்பதில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. தொடர் மழையால், பாகு காய்ச்ச எரிபொருளாக பயன்படுத்தப்படும் கரும்பு சக்கையை காய வைக்க முடியாததால், தொழில் சுணக்கம் கண்டு உள்ளது.மழைநீர் தேங்காத பகுதியான தார் சாலையில், வெயில் தலை காட்டும் நேரத்தில்சக்கையை உலர்த்தும் விவசாயிகள், சிரமத்துடன் வெல்லம் தயாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X